BREAKING தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த 12.07.2022 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இது குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-
Tags: தமிழக செய்திகள்