BREAKING : CBSE சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...!
BREAKING : CBSE சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...!
இன்று சிபிஎஸ்இ 10 ம் வகுப்ப மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது
2020-2021 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகள் இரண்டு பருவத் தேர்வுகளாக நடத்தப்பட்டன. அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ பொதுத்தேர்வை மார்ச்-ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்பட்டன.
தேர்வு அவ்வாறே முதல் பருவ தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, 2-வது பருவ பொதுத்தேர்வுகள் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கியது.
அதன் பிறகு 10-ம் வகுப்பு தேர்வு மே 24-ம் தேதி வரையும் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு 2022 ஜூன் 15-ம் தேதி வரையும் நடைபெற்றது. இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியிட்டது.
மதிப்பெண் பார்க்க
ஆன்லைனில் பார்ப்பது எப்படி:-
மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் சரிபார்த்து ஆன்லைனில் ரிசல்டை பெறலாம்.
அதில் ரோல் எண், பள்ளிக் குறியீடு மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உங்கள் தேர்வு முடிவை பார்க்கலாம்
டிஜிலாக்கரில் சிபிஎஸ்இ முடிவை பார்ப்பது எப்படி:-
https://www.digilocker.gov.in/ என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் லாகின்செய்யுங்கள்
அடுத்து அதில் உங்கள் ஆதார் எண் பதிவிடுங்கள்
அடுத்து அதில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தைக் கிளிக் செய்து 'சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான டெர்ம் 2 ஆம் வகுப்பு முடிவுகள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.
Tags: கல்வி செய்திகள்