Breaking News

நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் முழு விவரம்...

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வு விதிமுறைகளை  தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது





நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

மாணவர்கள் காலை 11 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.

ஹால்டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி
 

முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்

வருகை பதிவேடு பயன்பாட்டுக்காக  அரசால் வழங்கப்பட்ட பான் கார்டு , ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, 12ம் வகுப்பு தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட், பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை தேர்வர்கள் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னர் தேர்வு எழுத அனுமதி 

வெப்பநிலை அதிகமாக இருந்தால் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதி 

தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்

மதியம் 1.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை

தேர்வர்கள் தனியாக தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எந்த வகையிலான எலக்ட்ரானிக் பொருட்களுக்களையும் எடுத்து வரக்கூடாது.

தேர்வர்கள் ஆடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முழுக்கை சட்டை போன்றவை அணிந்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முடிவதற்கு முன்பாக எந்தவொரு மாணவரும் வெளியே செல்ல அனுமதி இல்லை. மாணவர்கள் தேர்வு முடிந்த பின்னர் ஒரே நேரத்தில் செல்லக்கூடாது



Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback