Breaking News

அங்கிகாரம் இல்லாத நர்சிங் படிப்புகள் பட்டியல் வெளியிட்ட தமிழ்நாடு செவிலியர் குழுமம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு.மாணவர்கள் செவிலியர் பயிற்சியில் சேர்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.... 

நர்சிங் பயிற்சி என்ற பெயரில் பல பெரிய மருத்துவமனைகள், நிறுவனங்கள் ,பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகள், பள்ளிகள் கீழ்க்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட்டுகளை வழங்குகிறார்கள் .இந்த சர்டிபிகேட்டுகளை கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது . கல்வி நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது 

இது தொடர்பாக தமிழக செவிலியர் குழுமும் வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம்:


அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல் 

2022-2023 தமிழ்நாட்டில் நர்சிங் பள்ளி/கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சில் ஆகும். இத்தகைய கவுன்சில்களின் அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகளில் பயில்வதே முறையான கல்விக்கு வழிவகுக்கும். அதனால் நர்சிங் படிப்பு பயில விரும்பும் மாணவ/மாணவியர்கள் தாங்கள் தேர்வு செய்யும் நர்சிங் பள்ளி அல்லது கல்லூரியானது அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள எங்களது இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இணையதள முகவரி



இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட செவிலியப் படிப்புகள் 

1) Certificate Course in Auxiliary Nursing-Midwifery

2) Diploma in General Nursing & Midwifery 

3) B.Sc.(Nursing)

இக்குழுமத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அனைவரும் இக்குழுமத்திலிருந்து 2021-2022ன் ஆண்டுக்கான அங்கீகார ஆணையை இக்குழுமத்தின் 11(2)(c)ன் சட்டப்படி (Tamilnadu Act Ill & XXVI of 1926 & 1960) கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

பொதுமக்கள் கவனத்திற்கு

நர்சிங் பயிற்சி (Nursing Training) என்ற பெயரில் பெரிய / சிறிய மருத்துவமனைகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், கீழ்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளோமா மற்றும் சர்டிபிக்கேட்களை வழங்குகிறார்கள். இந்த சர்டிபிக்கேட்களை இக்கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது. இத்தகைய கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள்  எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

டிப்ளோமா இன் நர்சிங் அஸிஸ்டென்ட் கோர்ஸ் (Diploma in Nursing Assistance Course) (6months / 2years) 

டிப்ளோமா இன் நர்சிங் (Diploma in Nursing) ( 2 years)

டிப்ளோன இன்ஃபர்ஸ்ட் எய்டு நர்சிங் (Diploma In First Aid Nursing) (2 Yrs) 

வில்லேஜ் ஹெவ்த் நர்சிங் (Village Health Nursing) (2 years) .

டிப்ளோமா இன் நர்சிங் எய்டு (Diploma in Nursing Aid) (2 years) 

டிப்ளோமா இன்ஃபர்ஸ்ட் எய்டு & ப்ராக்டிகல் நர்சிங் (Diploma in First Aid & Practical Nursing)

டிப்ளோமா இன் ப்ராக்டியில் நர்சிங் (Diploma in Practical Nursing) (1 yr / 2yrs) 

சர்டிஃபிகேட் இன் நர்சிங் (Certificate in Nursing) (1 year)

அட்வான்ஸ்டு டிப்ளோமா இன் நர்சிங் அஸிஸ்டென்ட் (Advanced Diploma in Nursing Assistant) (2 years) 

டிப்ளோமா இன் ஹெல்த் அஸிஸ்டென்ஸ் (Diploma in Health Assistance) (1 yr)

நர்ஸ் டெக்னிஸியன் கோர்ஸ் (Nurse Technician Course) 

ஹெல்த் கைடு கோர்ஸ் (Health Guide Course) 

சர்டிஃபிகேட் இன் ஹெல்த் அஸிஸ்டென்ட் (Certificate in Health Assistant)

சர்டிஃபிகேட் இன் ஹாஸ்பிட்டல் அஸிஸ்டென்ட் (Certificate in Hospital Assistant)

சர்டிஃபிகேட் இன் பெட்ஸைடு அஸிஸ்டென்ட் (Certificate in Bedside Assistant)

சர்டிஃபிகேட் இன் பேஷண்ட் கேர் (Certificate in Patient Caro) 

சர்டிஃபிகேட் இன் ஹோம் ஹெல்த் கேர் (Certificate in Home Health Care} 

தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் சட்டப்பிரிவு 12 (a) (1) மற்றும் (2)ன் படி, இதுப்போன்ற போலி படிப்புகளைநர்சிங் என்ற பெயரில் நடத்தும் நிறுவனம், சங்கம் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது அபராதமும் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என இந்த பொது அறிக்கை மூலம் அனைவருக்கும் எச்சரிக்கிறோம். மேலும், சென்னை உயர்நீதி மன்ற ஆணை WP No. 15556 of 2014 நாள் 13.04.2015ன் படி போலி நர்சிங் ல் பயிற்சி நிறுனங்களின் மீது தமிழக அரசின் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்பதையும்
தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் மேற்கண்ட அங்கீகரிக்கப்படாத படிப்புகளை படித்தால் அரசுப்பணியில் சேர முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் இந்த மாணவ மாணவியர்கள் எந்த ஒருமருத்துவமனைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட செவிலியராக பணிபுரிய இயலாது மற்றும் நர்சிங் கவுன்சிலில் இப்படிப்பினை பதிவு செய்ய இயலாது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். 

அவ்வாறு பணிபுரிவதை நர்சிங் கவுன்சிலின் கவனத்திற்கு தகவல் வந்தால் கவுன்சிலின் சட்டபடி அவர்களுக்கு  அபராதமும் மற்றும் criminal action எடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். 

பொது மக்கள் இவ்வாறான மேற்கண்ட பயிற்சிகள் நடத்துபவர்கள் விவரங்களை முகப்பில் அளித்துள்ள இக்குழுமத்தின் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ மேல் நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவிக்கவும் கோரப்படுகிறது.

எனவே, இத்தகைய நிறுவனங்கள் தானாக முன்வந்து மேற்கூறிய பயிற்சிகளை நிறுத்திவிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், அத்தகைய நிறுவனங்களின் மீது கவுன்சிலின் விதிகளின்படி அபராதமும் மற்றும் சட்டப்படி உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என தமிழ்நாடு செவிலியர் குழுமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள நர்சிங் கல்லூரிகள் பட்டியல் பார்வையிட

https://www.tamilnadunursingcouncil.com/recognised_institution_list.php?id=NA==

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback