Breaking News

அரஃபா நாள் சொற்பொழிவினை தமிழில் கேட்க கிளிக் செய்யுங்க

அட்மின் மீடியா
0

இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா நாள் சொற்பொழிவின் நேரலை வருகின்ற 08-07-2022 அன்று தமிழில் மொழிபெயர்த்து ஒலிபரப்பப்படும்.அதனை கீழ்கண்ட லிங்க்கில் கேட்கலாம்...

புனித ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அரஃபா உரையை தமிழ் மொழியிலும் மொழி பெயர்க்க சவூதி அரேபிய அரசு முடிவு 


 



மெக்காவில் அரஃபா என்ற பரந்து விரிந்த மைதானத்தில் துல்ஹஜ் பிறை 9 அன்று (ஹஜ் பெருநாளுக்கு முதல்நாள்) லட்சக்கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் முன்னிலையில் பேருரை நிகழ்த்தப்படும். முதன்முதலில் நபி நாயகம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த பேரூரை 1400 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இதுதான் நபிகள் நாயகத்தின் இறுதி பேருரையாகவும் அமைந்தது.

அரபு மொழியில் தலைமை இமாம் நிகழ்த்தும் இந்த பேருரை இதற்கு முன்னதாக ஆங்கிலம், பிரென்சு, மலாய், உருது, பார்சி, ரஷியன், சைனீஸ், வங்காளம், துர்கீஷ், ஹவுசா ஆகிய 10 மொழிகளில் மொழிபெயர்த்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 4 மொழிகளில் உரையை மொழிபெயர்க்க சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.  இந்த ஆண்டு முதல் தமிழ், இந்தி, ஸ்பானிய மொழி மற்றும் ஆப்ரிக்க மொழியான ஸ்வாஹிலி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன அரஃபா பேருரையை மொழி பெயர்க்க மக்கா இமாம் ஷேக் சுதைஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.


அரஃபா நாள் சொற்பொழிவினை தமிழில் கேட்க கிளிக் செய்யுங்க

https://manaratalharamain.gov.sa/arafa/arafa_sermon/kn


அரபியில் கேட்க:-

https://www.youtube.com/watch?v=NMx33LJqPks&t=29s

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback