Breaking News

பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு கொரோனா தொற்று

அட்மின் மீடியா
0
 
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது.

 


பாமக நிறுவனர் ராமதாஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்
 
நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
 
கரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback