பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது முழு விவரம்..
பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது
அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் கலகத்தை உண்டு செய்தல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசாரால் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்
பாஜக கட்சியை சேர்ந்த சவுதா மணி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசும் வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
கலகத்தை உண்டு செய்தல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்திருந்தார்கள் அதன் பின்பு முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தார் ஆனால் அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது இந்நிலையில் சவுதா மணியை சைபர் போலீசார் கைது செய்துள்ளார்கள்.
Tags: தமிழக செய்திகள்