இலங்கை அதிபர் பதவிக்கான போட்டியில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி!
அட்மின் மீடியா
0
இலங்கை அதிபர் பதவிக்கான போட்டியில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி!
இலங்கையை பொருளாதார சீரழிவில் இருந்து மீட்க முடியாமல் போனதால் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவிகளை ராஜினாமா செய்தனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே இலங்கையைவிட்டு தப்பி ஓடி தற்போது சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார்இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய விலகியதைத் தொடர்ந்து இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, புதிய தற்காலிக ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களால் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கோத்தபாய ராஜபக்சே பதவி விலகிய 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆகையால் வரும் 20-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.Ads byதற்போதைய நிலையில்
தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
ஜேவிபி தலைவர் அனுரா குமாரதிசநாயக
டல்லஸ் அல்லபெரும உள்ளிட்டோர் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் பங்கேற்றார்கள்
இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க,இன்று காலை 9:30 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடியது மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதில் 223 வாக்குகள் பதிவாகியது மேலும் பதிவான வாக்குகளில் 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்படது
அதில் 134 உறுப்பினர்களின் வாக்குகளை பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார்
Tags: வெளிநாட்டு செய்திகள்
