கிக் பாக்சிங் போட்டியில் எதிராளி தாக்கியதில் உயிரிழந்த இளம் வீரர் ...வீடியோ
கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகர்பாவியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி நடைபெற்றது.
இந்த போட்டியில் மைசூரை சேர்ந்த நிகில் வயது 23 என்பவர் கலந்து கொண்டார் அப்போது நிகிலுக்கும் மற்றொரு வீரருக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியின் போது எதிராளி தாக்கியதில் நிலைகுலைந்த போன நிகில் மயங்கி கீழே விழுந்தார் உடனடியாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் கிக் பாக்சிங் போட்டியில் வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போட்டியின் வீடியோ தற்போது இனையத்தில் வைரலாகி வருகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
