இந்திய குடியரசு தேர்தலில் பாஜகவின் திரௌபதி முர்மு அபார வெற்றி !
இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது.
அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணதொடங்கியது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா அவர்களும் போட்டியிட்டனர்.
குடியரசு தலைவர் தேர்தலில் மொத்தமாக 4754 வாக்குகள் பதிவாகின,
அதில் 4701 செல்லுபடியாகும் 53 வாக்குகள் செல்லாதவை
பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 2824 முதல் முதல் விருப்பு வாக்குகளை(அதன் மதிப்பு 6,76,803) பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா 1,877 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார் அதன் மதிப்பு 3,80,177.
திரௌபதி முர்மு குடியரசு தலைவர் பதவிக்கு வெற்றிபெற தேவையான வாக்குகளின் ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்ததால் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தேர்தல் அதிகாரி பிசி மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Tags: இந்திய செய்திகள்