Breaking News

இளையராஜா எனும் நான், கடவுளின் பெயரால் பதவியேற்கிறேன் - பதவியேற்பு வீடியோ

அட்மின் மீடியா
0

மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக கடந்த சிலநாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டார்.



இந்நிலையில் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இளையராஜா தமிழில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.

பதவி ஏற்க்கும் போது மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் 'கடவுளின்' பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்," என்று இளையராஜா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.



வீடியோ பார்க்க:-

https://twitter.com/Pannaipuram_Off/status/1551493806302064640

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback