Breaking News

கபடி போட்டியில் விளையாடும்போது கபடி வீரர் மரணம் ! வீடியோ

அட்மின் மீடியா
0

பண்ருட்டி அருகே மைதானத்தில் கபடி விளையாடிய வீரர் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்




கடலூர் மாவட்டடம் பண்ருட்டி வட்டம் முத்தாண்டிகுப்பம் காவல் சரகம் மானடிக்குப்பம் கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கபடி போட்டி தொடங்கியது. இரவு 9.30 மணியளவில் கபடி விளையாட்டின் போது, பெரியபுறங்கனி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் சஞ்சய் (எ) விமல்ராஜ் (21)  விளையாடினார். 

அப்போது எதிர் அணியை சேர்ந்த வீரர் விமல்ராஜை பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவின்றி கிடந்தார்.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனடியாக விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கபடி களத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்  மத்தியில் அப்பகுதி மக்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/shorts/KvkGtt3XkUU

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback