13 மாவட்டங்களில் கன மழை- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அதன்படி19.07.2022 இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை 20.07.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
அதேபோல் நாளை மறுநாள் 21.07.2022 நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்