ஜிஎஸ்டி வரி உயர்வு - எதற்கெல்லாம் வரி உயர்வு முழுவிவரம்
ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-ஆவது கூட்டம், சண்டீகரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
சில்லறை விற்பனை பொருள்களின் வரி உயர்த்தப்பட்டுள்ளது
அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி அஞ்சல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படவுள்ளது.
கத்தி,
பிளேடு
பேனா மை,
கிரைண்டர்கள்,
எல்.இ.டி. விளக்குகள்,
மின்னணு கழிவு பொருட்கள்
பதப்படுத்தப்பட்ட தோல்கள்
அரிசி ஆலை இயந்திரங்கள்
நீர்மூழ்கி மோட்டார் பம்புகள்
பால் பண்ணை இயந்திரங்கள்
சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர்கள்,
துணிகளுக்கு பிரிண்டிங் செய்யும் இங்கு
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒப்புதல் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணி ஆகியவைகளுக்கும் வரி 5இல் இருந்து 12 சதவீதமாகவும் 12-ல் இருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது
வணிக பெயரில் அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருள்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்

