திருச்சி சிவா மகன் சூர்யா அதிரடி கைது!
அட்மின் மீடியா
0
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் சில வாரம் முன்பு பாஜகவில் இணைந்தவருமான சூர்யா கைது.
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து, தன் கார் மீது பேருந்து மோதிய சம்பவத்தில் இழப்பீடு கேட்டு பேருந்தை தன் வசம் எடுத்துக்கொண்டு உரிமையாளரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பேருந்தின் உரிமையாளர் அளித்த புகாரில் சூர்யாவை கைது செய்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான சூர்யாவை சற்று நேரத்தில் நீதிபதி முன் ஆஜர் படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்