Breaking News

இந்த லோன் ஆப் மூலம் கடன் வாங்காதீர்கள் பட்டியல் வெளியிட்ட டிஜிபி சைலேந்திர பாபு

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில், நம்பகமற்ற செயலிகள் மூலம் கடனை பெறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்



பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நம்பகமற்ற செயலிகளின் மூலம் கடன் வாங்க வேண்டாம் 

செயலிகளின் மூலம் கடன் வாங்கும் போது, கடன் பெறுபவரின் செல்போனில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படம் மற்றும் தனிப்பட்டவிவரங்களை அந்த செயலிகள் சேகரித்து வைத்துக் கொள்கின்றன. மேலும் கடன் வாங்கும் தொகையில் சுமார் 30 சதவீதம் பணத்தை பிராசஸிங் கட்டணமாகப் பிடித்துக் கொண்டு, மீதமுள்ள பணம் கடன் வாங்குபவரின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கப்படும்.

மேலும், கடன் பெற்றவர்களின் நண்பர்கள், உறவினர்களின் செல்போனுக்கு, கடன் பெற்ற நபர் குறித்து தவறாகவும், ஆபாசமாகவும் குறுஞ்செய்திகளை மோசடிக் கும்பல் அனுப்புகிறது. இதனால், லோன் செயலிகள் மூலம் கடன் பெறுவோர், பணிபுரியும் இடத்திலும், உறவினர்களிடமும் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெரிய அளவிலான பண இழப்பும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இத்தகைய லோன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் 

Euvalt, 

Masen Rupee, 

Lory loan, 

Wingo Loan, 

cici Loan, 

City cash  

என்ற பெயரில் இருக்கும் லோன் ஆப்களை உடனே டிலைட் செய்துவிடுங்கள்  இந்த  கடன் செயலிகள் ஆபத்தானவை, எச்சரிக்கையாக இருங்கள் என டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/stalin_ips/status/1537067497538478081

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback