மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் பாடத்துக்கான கட்டணம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, பள்ளிக்கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2022-2023-ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:மேல்நிலை கணினிப் பிரிவு மாணவர்களுக்கு சுட்டண விலக்குஅரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022-23-ஆம் கல்வி ஆண்டிலிருந்துரூ200 தனிக் கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக இரத்து என அரசானை வெளிடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
