மத்திய பிரதேசத்தில் ஒரு குடம் தண்ணீர்க்காக வற்றிய கிணற்றில் உயிரை பணயம் வைக்கும் பெண்கள்.. வீடியோ !!
அட்மின் மீடியா
0
குடிநீருக்காக தினந்தோறும் வறண்டு போன கிணற்றில் தங்களது உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராம மக்கள். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீரே இல்லாத வற்றிய கிணற்றில் தண்ணீர் எடுக்க கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்து வந்து, படிகளோ அல்லது கயிறு கூட இல்லாமல் கிணற்றின் பக்கவாட்டில் பதிக்கப்பட்டுள்ள கற்களை மட்டுமே பிடித்து இறங்கியும், ஏறியும் வருகின்றார்கள்
மேலும் அந்த வற்றிய கிணற்றில் அடிப்பகுதியில் கொஞ்சமாக தேங்கி நிற்கும் தண்ணீரை குடத்தில் பிடித்த பிறகு மீண்டும் மேலே ஏறி வருகின்றனர்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ