Breaking News

காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் விவகாரம்: மறுப்பு தெரிவித்துக் காவல் ஆய்வாளர் வீடியோ வெளியீடு

அட்மின் மீடியா
0

 சிங்கப்பெண் அதிரடி படையில் நியமிக்கப்பட்ட பெண் போலீஸ் அளித்த பாலியல் புகாருக்கு ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் திலீபன் தன்னிலை விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் திலீபன். இவருக்குக் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பணியிட மாறுதல் உத்தரவு வந்தது.இதையடுத்து, நாளை முதல் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திலீபன் பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சிகளில், திலீபன் மீது அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாகக் கூறிச் செய்திகள் வெளியாகின.இதையடுத்து, அந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்து வீடியோ ஒன்றை உடனே காவல் ஆய்வாளர் திலீபன் வெளியிட்டுள்ளார்.அதில்...

தன் மீதான வெளியே பரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு மாறானது, இதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ள தன்னையோ, தன்னுடன் பணியாற்றும் ஆண்/பெண் சக காவலர்களிடமோ, அல்லது எனது ஊர் மக்களிடம் விசாரித்து விட்டு செய்தியை வெளியிட்டுங்கள்...

எனக்குக் கீழ் பணியாற்றும் அனைத்துப் பெண் காவலர்களையும் எனது மகள்களாகவே பார்க்கிறேன்.மேலும், இதுவரை யாரும் என் மீது காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் அளிக்கவில்லை. ஆனால், என் மீது பாலியல் புகார் அளித்துள்ளதாகக் கூறித் தவறான செய்தியைத் தொலைக்காட்சிகளில் வெளியிட்டுள்ளார்கள். முதலில் வரும் அவதூறு செய்தி மிக வேகமாகப் பரவி விடுகிறது; ஆனால், அதன்பிறகு அந்தச் சம்பவத்தில் உண்மை இல்லை என்று தெரிந்தால், அந்த மறுப்புச் செய்தி மிக மெதுவாகத்தான் வெளியாகிறது.

மேலும், என் காவல் நிலையத்தில் பணிபுரியும் யாராவது ஒருவரோ அல்லது ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களோ என்னைக் குறித்துத் தவறாகக் கூறினால், உடனே எனது வேலையை ராஜினாமா செய்து விடுகிறேன்.

அதுமட்டுமல்லாமல், 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நான் தினமும் விளையாட்டுச் சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறேன்.இப்படிப்பட்ட தவறான எண்ணம் என்னிடம் இருந்திருந்தால், கடந்த 4 ஆண்டுகளாக என்னால் இந்த இலவசப் பயிற்சியைத் தொடர்ந்திருக்க முடியுமா? எனவே, என் மீது திட்டமிட்டுப் பரப்பப்படும் இந்த அவதூறு செய்திக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் பணியை பொறுப்புணர்வோடு விரும்பி செய்யுகிறேன், என்னுடன் பணியாற்றும் சக பெண் காவலர்களுக்கு டியூட்டி விசயமாகவோ, வேலை செய்யவில்லை என்றாலோ கொஞ்சம் திட்டுவேனோ தவிர்த்து வேறு எந்த மென்டல் டார்ச்சரோ செய்யவில்லை,பெண் போலிஸார்களை என் சொந்த பிள்ளைகளாக நினைக்கும் என்மீது இப்படி ஒரு பாலியல் புகார் பெண் காவலர் கொடுக்க வாய்ப்பில்லை என நூறு சதவீதம் நம்பும் நான்.. இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் முழு விசாரனைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளேன்.

மேலும் இந்தப் புகாரிலிருந்து விடுபடாமல் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணியில் சேர மாட்டேன் என ஆய்வாளர் திலீபன்  தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/sureshkalipandi/status/2061291293368832443

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback