Breaking News

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் மரணம் என பரப்பபடும் செய்தி உண்மையில்லை

அட்மின் மீடியா
0

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், அவை மீட்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.




1999இல் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கவிழ்த்து அதிபரானார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் 2008 வரை பாகிஸ்தான் நாட்டின் அதிபராக இருந்தார். ஆட்சியில் இருந்த சமயத்தில் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2008இல் அவர் அதிபர் பதவியில் இருந்து விலகினார்,


முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில் முஷாரப் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அதிபரான முஷாரஃப், 2016 முதல் துபாயில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். .இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர உயிர்காக்கும் மருத்துவ உபகரணம் கொண்டு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் காலமானதாக வெளியான செய்திக்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

முஷாரப் வெண்டிலேட்டரில் வைக்கப்படவில்லை என்றும், உடல் உறுப்புகள் இயங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், சிகிச்சைக்காக 3 வாரங்களாக மருத்துவமனையில் உள்ளார் என்று முஷாரப் ட்விட்டர் கணக்கில் குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தி 10.06.2022 அன்று இரவு 10 மணிக்கு போஸ்ட் செய்யப்பட்டது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback