வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்
வாட்ஸ்அப்பில் விரைவில் எடிட் பட்டன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வாட்ஸ்அப்பில் நாம் மற்றவர்களுக்கு மெசேஜ்களை அனுப்பிய பிறகு அந்த மெசஜை திருத்த முடியாது அதாவது எடிட் செய்யமுடியாது மாறாக நாம் அந்த மெசஜை அழித்துவிடமுடியும் டிலைட் செய்யமுடியும்
தற்போது வாட்ஸப் நிறுவனம் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இனி நாம் அனுப்பிய மெசஜ்களில் தவறு இருந்தால் அதனை டிலைட் செய்யவேண்டாம் தவறான மெசேஜ்களை கிளிக் செய்து அதை திருத்த இந்த புதிய வசதி உதவும். .இதைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு தகவலை மற்றொருவருக்கு அனுப்பிய பிறகும் திருத்த முடியும்.
மேலும் வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி சோதனை முயற்சியாக தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.சோதனை முடிந்தவுடன் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிகின்றது
Tags: தொழில்நுட்பம்