இந்திய விமானப்படையில் அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டத்தில் இணைவது எப்படி!! விவரங்களை வெளியிட்ட இந்திய விமானப்படை
அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டம் பற்றிய விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட பணியாளர்களுக்கு, தற்போதுள்ள விதிகளின்படி, பெற்றோர்/பாதுகாவலர்களால் பதிவுப் படிவத்தில் கையொப்பமிடப்பட வேண்டும். நான்கு வருட காலத்திற்குப் பிறகு, அனைத்து அக்னிவீரர்களும் படையிலியிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
மேலும்,இத்திட்டத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முறையாக ஏற்று அக்னிவீரர்களும் ஆவணத்தில் கையொப்பமிடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பணியின் போது IAF அக்னிவீரர்கள் தங்கள் சீருடையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை அணிவார்கள்.
இந்திய விமானப்படை அக்னிவீரர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 30 நாட்கள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மருத்துவ விடுப்பும் உண்டு என கூறப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் தவிர,நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் அக்னிவீரர்கள் அவர்களின் சொந்த கோரிக்கையின் பேரில் பணியில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள்.
இந்த திட்டத்தில் அக்னிவீரர்களுக்கு ஊதியமாக முதல் வருடத்தில் மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
பின்னர்,அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிப்புடன் கூடுதலாக,ஆபத்து மற்றும் சிரமம், உடை மற்றும் பயண கொடுப்பனவுகள்(allowances) வழங்கப்படும்.
ஒவ்வொரு அக்னிவீரரும் தனது மாத வருமானத்தில் 30% ‘அக்னிவீர் கார்பஸ் ஃபண்டுக்கு’ அளிக்க வேண்டும்.
நிதியில் திரட்டப்பட்ட தொகைக்கு அரசு பொது வருங்கால வைப்பு நிதிக்கு இணையான வட்டி விகிதத்தை வழங்கும்.
நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தவுடன்,அக்னிவீரர்கள் ‘சேவா நிதி’ தொகுப்பைப் பெறத் தகுதி பெறுவார்கள்.
அதில் அவர்களின் பங்களிப்பு மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் திரட்டப்பட்ட தொகைக்கான வட்டி ஆகியவை அடங்கும்.
அக்னிவீரர்களுக்கு எந்த வகையான ஓய்வூதிய பலன்களும் கிடையாது என இந்திய விமானப்படை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு