யார் வேண்டுமென்றாலும் விரும்பும் மதத்துக்கு மாறலாம்.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி
யார் வேண்டுமென்றாலும் விரும்பும் மதத்துக்கு மாறலாம்.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பாரதிய ஜனதா கட்சியின் அஸ்வினி உபாத்யாய டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பரிசுப் பொருட்கள் கொடுத்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
அந்த பொதுநல மனுவை நேற்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, துஷார் ரவ் கெடீலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
அப்போது அதிகமாக கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எங்கே என்பதற்கான தரவுகளை ஸ் தாக்கல் செய்யவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா என்றும் கேள்விக்கும் பதில் இல்லை.
மதமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் 3 தீர்ப்புகளை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ள மற்ற அனைத்தும் அவரது அனுமானங்கள். ஆகையால் எதன் அடிப்படையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதை விளக்க வேண்டும் என்றனர்.
மேலும் ஒருவரை கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் அவர் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை. ஒருவர் தான் விரும்பும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி