இருசக்கர வாகனத்துடன் கழிவுநீர் கால்வாயில் விழுந்த கணவன் மனைவி அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் காவலரும், அவரது மனைவியும் இருசக்கர வாகனத்துடன் கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வைரல் ஆகி வருகின்றதுஉத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தயானந்த் சிங் என்ற காவலர் மற்றும் அவரது மனைவி ராம்காட் இருவரும் அலிகாரில் உள்ள மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலை முழுவதும் மேடு பள்ளம் தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது.மழைநீர் மூடிய கழிவுநீர் கால்வாயில் வாகனத்துடன் காவலரும் அவரது மனைவியும் விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டதால் இருவரும் உயிர்தப்பினர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ:-
Tags: வைரல் வீடியோ