Breaking News

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மனு

அட்மின் மீடியா
0

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.




அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி., மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சென்றுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்பதற்காக டெல்லி செல்வதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார் . கட்சியின் விதிகளுக்கு எதிராக ஒற்றைத் தலைமையை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக பன்னீர்செல்வம் புகார் அளித்துள்ளார் . ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூட்டியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஒ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். தன்னுடைய கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது என அறிவிக்க வலியுறுத்தி முறையிட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback