இந்தியா மீதான பயணத்தடையை நீக்கிய சவூதி அரேபியா..!!
அட்மின் மீடியா
0
கடந்த மே மாதம் 22 ம் தேதி சவூதி அரேபிய அரசானது சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா உட்பட 16நாடுகளுக்கு செல்ல சவூதி குடிமக்களுக்கு தடை.. என அரிவித்தது மேலும் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கொரானா பரவல் கீழ் உள்ள 16 நாடுகளில் மீண்டும் பரவல் காரணமாக அந்த நாடுகளில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் அறிவித்திருந்தது.
நாடுகளின் பட்டியல் லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஆகும் மேலும் அரபு அல்லாத நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்பும் சவுதிகளின் பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் வலியுறுத்தி இருந்தது
இந்நிலையில் சவூதி அரேபியா இந்தியா, துருக்கி, எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் தனது குடிமக்கள் மீதான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியதாக சவூதியின் அரசு செய்தி நிறுவனம் SPA தெரிவித்துள்ளது. இதன் மூலம் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் என அனைவருக்கும் இந்தியா, சவூதி இடையே பயணம் செய்ய தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
