Breaking News

மேல் முறையிட்டு மனுவில் விடிய விடிய நடந்த விசாரணை-ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவான தீர்ப்பு முழு விவரம்...

அட்மின் மீடியா
0

அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்கான தனித்தீர்மானம் நிறைவேற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை. கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

அதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு, கட்சி விதிகளை திருத்துவதற்கு தடை கோரியும் கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன்,சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என்றும், அதிமுக பொதுக்குழுவுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும், கட்சி விதிகளை திருத்த தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வு நள்ளிரவு விசாரித்தது.

விடிய விடிய நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்த தடையில்லை . அதேசமயம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி இல்லை என்று கூறி தடை விதித்தனர். 

அத்துடன் பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கலாம். ஆனால் அதனை அமல்படுத்தக் கூடாது, என்று பழனிசாமி தரப்பு கோரிய நிலையில் அதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.

ஒற்றைத் தலைமை தீர்மானத்துக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தடை விதிக்காததை எதிர்த்து,ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் சென்னை அண்ணா நகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் விடிய விடிய விசாரணை நடந்த நிலையில் நீதிபதிகள் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback