Breaking News

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது.ரிசல்ட் பார்க்க...

அட்மின் மீடியா
0

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, நாளை வெளியாகிறது.




தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 

பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ம் தேதியும் 

10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி 30-ம் தேதியும் முடிவடைந்தது. 

மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆனது ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்க்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன

தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை 17-ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் 

எனவும் மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மதிப்பெண் விபரம், நாளை காலை,  வெளியாகிறது.


www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in 

www.dge2.tn.nic.in 

என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் வழங்கப்படும்.



Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback