இனி 2 ஜிபி வரை வாட்ஸப்பில் ஷேர் செய்யலாம்... சூப்பர் அப்டேட்
வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் உறுப்பினர்கள் அளவை 256ல் இருந்து 512 ஆக அதிகரித்துள்ளது
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப். நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பொறுத்து புதிய அப்டேட்களை அவ்வப்போது செய்து வருகிறது. அதன்படி தற்போது வெளியிட்டுள்ள அப்டேட்டில்
வாட்ஸ்அப் குரூப்பில் இதுவரை 256 நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும்.வாட்ஸ் அப்புதிய அப்டேட் மூலம் ஒரே வாட்ஸ்அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை வரை சேர்க்கலாம்.
மேலும் இதுவரை வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு குறைந்த அளவிலான பைல்களை மட்டுமே அனுப்ப முடியும்.வாட்ஸ் அப்100 MBக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கோப்புகளை அனுப்பமுடியாத நிலை இருந்து வந்தது. புது அப்டேட் படி 2ஜிபி வரையிலான போட்டோ, வீடியோ இவைகளை பகிரும் வசதியும் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாட்ஸ்-அப் ஆடியோ காலில் 8 பேர் மட்டுமே இணைந்து கொள்ள முடியும். இனி ஒரே நேரத்தில் 32 பேர் வரை கலந்துரையாடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்பறம் என்ன உடனே ப்ளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸப்பை அப்டேட் செய்யுங்க....
Tags: தொழில்நுட்பம்