Breaking News

பெற்றோர் வேலைக்கு சென்றதும் 2 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தும் பணி பெண்....வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் வேலைக்கு செல்லும் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தையை பார்த்துக் கொள்ள அப்பகுதியை சேர்ந்த ராஜினி சவுத்ரி என்ற பெண்ணை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தினார்கள். 


கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2 வயது சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது டாக்டர் குழந்தையின் உடலில் உள் காயங்கள் அதிகளவில் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் வேலைக்கார பெண் ராஜினி மீது தம்பதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனால் யாருக்கும் தெரியாமல் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி ராஜினியை கண்காணிக்க ஆரம்பித்தனர்.அவர்கள் வேலைக்கு சென்ற பின்னர் ராஜினி  அந்த 2 வயது குழந்தையை சரமாரியாக அடிக்கின்றார், அதனை கண்டு பெற்றோர் அதிர்ந்து போனார்கள். 

உடனடியாக போலீஸ் நிலையத்தில் ராஜினி மீது பெற்றோர் புகார் அளித்தனர்.வழக்குப்பதிவு செய்த போலீசார் பணிப்பெண் ராஜினியை 2 வயது குழந்தையை தடுமையாக தாக்கிய குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்தனர். 


வீடியோ பார்க்க:-

https://twitter.com/Nick27Kumar/status/1536988540071858176

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback