27ம் தேதி வங்கிகள் ஸ்ட்ரைக் 3 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்படும் முழு விவரம்
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி), அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் (ஏஐபிஇஏ), தேசிய வங்கி ஊழியா்கள் அமைப்பு (என்ஓபிடபிள்யு) உள்பட 9 வங்கி சங்கங்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு (யுஎஃப்பியு) 27 ம் தேதி அன்று வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும்.
அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது.இக்கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
- வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
- ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்.
- 2010-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் 27-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும்.மேலும் மேலும் வேலைநிறுத்தம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள்
25-ந் தேதி சனிக்கிழமை
26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை
27-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம்
அதனால் 3 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் வங்கி பணிகள் பாதிக்கக்கூடும்
Tags: தமிழக செய்திகள்