ஜார்கண்ட் நுபுர்சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறையில் 2 பேர் உயிரிழப்பு! 10 பேர் காயம்
பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது.
பாஜக தலைவர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஞ்சியில் நடந்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மெயின் ரோட்டில் ஏராளமானவர்கள் குவிந்து நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். அதிக அளவில் மக்கள் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டது
இதையடுத்து போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினார்கள். மேலும் போலீசார் துப்பாக்கியால் சுட்டும் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
தலைநகர் ராஞ்சியின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Tags: இந்திய செய்திகள்