மானவர்களே தயாரா!! ஜூலை 18 ம் தேதி அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறப்பு!
தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
ஐடிஐ முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொழிற் கல்வியை முடித்த சுமார் 2000 மாணவர்கள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், உள்ளிட்ட 6 பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.
இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என அறிவித்தார்
Tags: தமிழக செய்திகள்
