தமிழகம் முழுவதும் ஒரே வாரத்தில் கந்துவட்டி சம்மந்தமாக 124 புகார்கள்
தமிழகத்தில் ஒருவாரத்தில் 124 கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்பட்டன
தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின்படி கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில்,
கந்துவட்டி தொடர்பாக தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் 124 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 89 புகார் மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7, நாமக்கல்லில் 6, சேலத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கந்துவட்டி வழக்கில் கைது செய்யப்பட்ட 22 பேரிடம் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags: தமிழக செய்திகள்