Breaking News

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத் தொகை!- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தரவுகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.



மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்:

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகைக்கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் கடன் நிவாரண உதவி வழங்கியது போன்று தகுதியுடைய நபர்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம். 

எவ்வளவு விரைவில் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback