Breaking News

FACT CHECK மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என பரவும் செய்தி ?? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்வு தமிழக அரசு அறிவிப்பு என்று  ஒரு செய்தியினைபலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்வு தமிழக அரசு அறிவிப்பு  என பலரும் வாட்ஸப், பேஸ்புக்,போன்ற சமூக வலைதளங்களில் ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த இமேஜ்  குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த இமேஜை ஆராய்ந்தது, மேலும் அந்த இமேஜை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த இமேஜ் 2018 ம் ஆண்டு தமிழக அரசால் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் தான் அது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 


முழு விவரம்:-

பலரும் ஷேர் செய்யும் அந்த பேருந்து கட்டணம் உயர்வு பட்டியல் தற்போது வெளியானது இல்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த பேருந்து கட்டணம் உயர்வு கடந்த 2018 ம் ஆண்டு தமிழக அரசால் உயர்த்தபட்ட பட்டியல் ஆகும் ,

தற்போதுவரை தமிழக அரசு பேருந்து கட்டணம் உயர்வு பற்றி எந்த வித அறிவிப்பும் அறிவிக்க வில்லை, அப்படி ஏதேனும் அறிவிப்பு வந்தால் அனைத்து மீடியாக்களும் செய்தி வெளியிட்டு இருக்கும்,ஆனால் அது போல் எந்த வித அறிவிப்பும் இது வரை வரவில்லை

அதேசமயம் நேற்று 13.05.2022 அன்று சேலத்தில் நகராட்சி வளர்ச்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ” எரிபொருட்கள் விலையினால் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. எனினும், மக்களை பாதிக்காத வகையில் போக்குரவத்துக் கட்டணங்கள் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனத் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், திமுக அரசு பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி விட்டதாகவும், மே 18-ம் தேதி முதல் அமலுக்கு வரும் பேருந்து புதிய கட்டணங்களின் விவரங்கள் என இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.


முடிவு:-


தற்போது மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என சமூகவலைதளங்களில் பரவும் செய்தி 2018 ம் ஆண்டு செய்தி ஆகும் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.dinamalar.com/news_detail.asp?id=1942439


https://www.youtube.com/watch?v=Mc5pBeYoNe8

 

https://www.adminmedia.in/2022/05/fact-check-18.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback