Breaking News

ஆன்லைனில் ரம்மி விளையாடுகின்றீர்களா!!! டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ

அட்மின் மீடியா
0

ஆன்லைன் ரம்மியில் வரும் நடிகர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். 



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல உங்கள் ஆசையை தூண்டிவிட்டு கொஞ்சம் பணம் வரும், அதன்பின்பு உங்கள்  அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம். 

இது ஆன்லைன் ரம்மி அல்ல- மோசடி ரம்மி ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், கடன், வட்டி ,குடும்பப் பிரச்னை மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்" என தமிழக காவல்துறையின் அன்பான வேண்டுகோள் என அந்த வீடியோவில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.


முழு வீடியோ பார்க்க:-

https://www.facebook.com/watch/?v=761785938314881

Tags: முக்கிய அறிவிப்பு வைரல் வீடியோ

Give Us Your Feedback