Breaking News

உன்பெயர் முகமது தானே?’ முதியவர் மீது சரமாரி தாக்குதல், உடல் சடலமாக மீட்பு - பரபரப்பு வீடியோ

அட்மின் மீடியா
0

மத்தியப் பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 65 வயது முதியவரை, இளைஞர் ஒருவர் ‘உன் பெயர் முகமது தானே?’ என கேட்டு அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



மத்தியப் பிரதேசத்தில் ரத்லம் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் பன்வர்லால் ஜெயின். கடந்த மே 15ஆம் தேதி மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜஸ்தான் சென்ற அவர், அதன் பின்னர் காணாமல் போனார். 

இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்படி அவரது புகைப்படங்கள் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பித் தேடும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தச் சூழலில் தான், நேற்று நீமுச் மாவட்டத்தில் சாலையோரம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது அதன்பின்பு உயிரிழந்த பன்வர்லால் ஜெயின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பன்வர்லால் ஜெயினுக்கு இறுதிச் சடங்கு செய்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கிய போது, இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதில் 

அதில் பன்வர்லால் ஜெயின் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். அவரை ஒரு இளைஞர்  உன் பெயர் என்ன? முகமது தானே என கேட்கின்றார் அதற்க்கு  முதியவர் பதில் எதுவும் கூறாமல் இருக்கவே, முதியவரின் கன்னத்தில் அறைந்து, உன் பெயரை ஒழுங்காக சொல், உன் ஆதார் அட்டையை காட்டு எனவும் கேட்கின்றார்.

நடுங்கியபடி இருக்கும் முதியவர் பணம் தருவதாக கூறுகிறார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த தாக்குதல் நடத்துபவர் முதியவரின் தலை மற்றும் மண்டையில் சராமரியாக தாக்குகிறார். அவர் பணம் கொடுக்க முயற்சி செய்யும் போது கையை முறுக்குகின்றார் அந்த முதியவரை பலமுறை தாக்குவதும் வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக நீமுச் மாவட்டத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வீடியோவில் முதியவரை தாக்கும் நபர் தினேஷ் குஷ்வாஹா என அடையாளம் காணப்பட்டுள்ளது. பாஜகவின் முன்னாள் முனிசிபள் காப்ரேஷன் உறுப்பினர் கணவர் தான் தினேஷ் குஷ்வாஹா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.


வீடியோ பார்க்க:-

https://twitter.com/RaheemuddinNHRS/status/1528069957069643776

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback