மாணவர்களே உங்களுக்குதான் -தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு வர தடை..!!
தமிழகத்தில் 10, 11, மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் எடுத்துவர தேர்வுகள் இயக்ககம் தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது. மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் எடுத்துவர அரசு தேர்வுகள் இயக்ககம் தடை விதித்துள்ளது. தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்