Breaking News

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு



பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது.மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான 3 தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் அதிமுக இன்று வெளிய்ட்டுள்ள செய்தி குறிப்பில்:-

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் 10.6.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது சம்பந்தமாக 19.5.2022 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கழக மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை, கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி, 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1.திரு. C.Ve. சண்முகம், B.A., B.L., அவர்கள் 
கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் 
முன்னாள் அமைச்சர்

2. திரு. R. தர்மர், B.A., அவர்கள்
முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர்
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
ராமநாதபுரம் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்


Tags: அரசியல் தமிழக செய்திகள்

Give Us Your Feedback