Breaking News

டிஜி லாக்கர் என்றால் என்ன ?? எப்படி பயன்படுத்துவது

அட்மின் மீடியா
0


டிஜி லாக்கர் என்றால் என்ன:-

இன்றைய காலகட்டத்தில், ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நம் அனைவருக்கும் மிகவும் அவசியம் ஆகும், நாம் எப்படி அந்த ஆவணங்களை வீட்டில் எப்படி பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருப்போமோ அதுபோல் இனையத்தில் நமக்கு இந்திய அரசு இலவசமாக நமக்கு ஒரு டிஜிட்டல் லாக்கரை தந்துள்ளது அதில் நாம் நமக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அதில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் 

 டிஜி லாக்கரில் 

உங்கள் பான் 

ஆதார் அட்டை, 

பாஸ்போர்ட், 

ட்ரைவிங் லைசன்ஸ் 

சொத்து பத்திரம் 

ரேசன் கார்டு,

பாஸ்போர்ட் 

பள்ளி சான்றிதழ்

என அனைத்தையும் நாம் டிஜி லாக்கரில் பத்திரமாக சேமித்து வைக்கலாம். இதனை தேவைப்படும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்

உபயோகிப்பது எப்படி

நாம் கம்யூட்டர் அல்லது லேப்டாப் அல்லது மொபைல் போனில்கூட இதனை உபயோகிக்கலாம்

இதில் கணக்கை தொடக்க, முதலில் digilocker.gov.in என்ற வலைதளத்திற்குச் செல்லவும். 

பின்னர் தளத்தின் வலது பக்கத்தில் சைன் அப் ( Sign Up) என்பதைக் கிளிக் செய்க.

உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட ஒரு புதிய பக்கம் தோன்றும்

.நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு டிஜிலாக்கர் ஒரு OTP ஐ அனுப்பும்.

பயனர் பெயர் அதாவது யூஸர் நேம் மற்றும்பாஸ்வேர்டை அமைக்கவும். 

பின்னர், டிஜிலாக்கரைப் பயன்படுத்தலாம்.

 

ஆவணத்தை எவ்வாறு சேமிப்பது?

உங்கள் ஆவணத்தை டிஜிலாக்கரில் சேமிக்க, உங்கள் எல்லா ஆவணங்களையும் ஸ்கேன் செய்ய வேண்டும்.

நீங்கள் விரும்பினால், உங்கள் ஆவணங்களின் தெளிவான புகைப்படத்தையும் கிளிக் செய்யலாம், 

அதன் பிறகு நீங்கள் அதை டி.ஜி. லாக்கரில் சேமிக்க வேண்டும்.

முதலில் டிஜிலாக்கரில் லாகின் செய்யவும்தளத்தின் இடது பக்கத்தில் Uploaded Documents சென்று அப்லோட் என்பதைக் கிளிக் செய்க. 

உங்கள் ஆவணத்தைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை எழுதுங்கள். அப்லோட் என்ற பொத்தானைக் கிளிக் செய்க. 

உங்கள் ஆவணங்கள் இப்போது டிஜி லாக்கரில் பாதுகாப்பாக இருக்கும்.

போனில் பயன்படுத்த பிளே ஸ்டோரில் இருந்து Digilocker App யினை Download செய்து Install செய்ய வேண்டும்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback