மின் தடையால் மாறி போன மண பெண் முழு விவரம்...
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள அஸ்லானா கிராமத்தில், ரமேஷ்லாலின் இரண்டு மகள்களான நிகிதா மற்றும் கரிஷ்மா ஆகிய இரு மகளுக்கும் ஒரே மேடையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும், வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த போலா மற்றும் கணேஷ் ஆகிய இரு மணமகன்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணநாள் அன்று மணப்பெண்கள் இருவரும் திருமண விழாவில் முகத்தை மறைத்து இருந்த ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்தார்கள் அப்போது திருமணத்திற்கான அனைத்து சடங்குகளும் நடைபெற்று வந்தது.
அந்த சமயத்தில் அப்பகுதியில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.அந்த மின்வெட்டு காரணமாக அந்த திருமண மண்டபம் சற்று இருட்டில் இருந்துள்ளது. அப்போது அக்கா மற்றும் தங்கை ஆகிய இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருந்ததால் அக்காவை திருமணம் செய்து கொள்ள இருந்த மணமகன் தவறுதலாக மாற்றி நின்ற தங்கையை திருமணம் செய்ததாக தெரிகிறது. அதேபோல் தங்கைக்கு பாத்திருந்த மாப்பிள்ளை மாற்றி நின்ற அக்காவை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறிது நேர பிரச்சனைக்கு பிறகு குடும்பங்கள் சமரசம் செய்து கொண்டு தங்கள் சரியான துணையுடன் சடங்குகளைச் செய்து திருமணம் செய்துள்ளார்கள்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags: இந்திய செய்திகள்