Breaking News

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அட்மின் மீடியா
0

6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.
 
இந்நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
அதன்படி,திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில் 3 இடங்களில் திமுக போட்டியிடும் எனவும் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
 
 
திமுக சார்பில் 
 
தஞ்சை சு.கல்யாணசுந்தரம்,
 
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்,
 
இரா.கிரிராஜன் 
 
ஆகிய 3 பேர் போட்டியிடுவர் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
 
 
 



 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback