இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவை முதல் முறையாக தாக்கிய கொரோனா நாடு முழுவதும் ஊரடங்கு கிம் ஜாங் உன் அறிவிப்பு
கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று இன்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில்,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு,வட கொரியாவில் முதல்முறையாக கொரோனா பதிவாகியுள்ளது.
உடனடியாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்,கொரோனா
கட்டுப்பாடுகள் தொடர்பாக நாட்டின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி,கொரோனா
வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ‘முழு ஊரடங்கு’ அமல்படுத்த
உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக திவீரமாக உலக நாடுகள் தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வடகொரியா அரசு தனது நாட்டில் கொரோனா தொற்று இல்லை என மறுத்து வந்தது.மேலும் அங்கு உள்ள மக்களில் யாரும் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது
இந்நிலையில் தற்போது அந்நாட்டில் முதல் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்:-
நமது தேசத்தில் ஒமைக்ரான் வைரஸ் சத்தமில்லாமல் நுழைந்துவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தேசிய அவசர நிலை அறிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்படுகிறது.மக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.என வடகொரிய அதிபர் கூறியுள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
.jpg)