ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல : அசாதுதீன் ஓவைசி
உத்திரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆகவே, சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்று வாரணாசி கோர்ட்டு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஞானவாபி மசூதிக்குள் உள்ளது சிவலிங்கம் அல்ல என்று அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓவைசி கூறுகையில், ஞானவாபி மசூதிக்குள் உள்ளது செயற்கை நீரூற்று அமைப்பு. அது சிவலிங்கம் அல்ல. இவர்கள் சிவலிங்கம்னு சொல்றது, தொழுகைக்கு பள்ளிவாசல் செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டிக்கு நடுவில் அலங்காரத்துக்கு இருக்கும் நீரூற்று போன்ற கல்லை தான் அனைத்து மசூதியிலும் செயற்கை நீரூற்று அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள கமிஷன் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறாதது ஏன்?. அந்த இடத்திற்கு சீல் வைப்பது 1991 சட்டத்தின்படி விதிமீறலாகும்’ என்றார்.
Tags: இந்திய செய்திகள்