அஸ்ஸாம் ரயில் நிலையத்தில் ரயிலை புரட்டிபோட்ட வெள்ளம் வீடியோ
அஸ்ஸாமில் பலத்த மழை வெள்ளம் காரணமாக பயணிகள் ரயில் கவிழ்ந்து விட்டது. நல்ல வேளையாக அந்த ரயில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு நின்றிருந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அஸ்ஸாமில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மாநிலத்தின் 20 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்திருக்கிறது.
இந்த வெள்ளம் காரணமாக பிரம்மபுத்திரா நதியில் நேமாதிகாட்டில் அபாயக் கட்டத்துக்கு மேல் தண்ணீர் செல்கிறது. மேலும் அஸ்ஸாமில் பல சாலைகள், பாலங்கள் ,ரயில் தண்டவாளங்கள் மற்றும் வீடுகள் பலத்த சேதமடைந்திருக்கின்றன.வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தற்போது இணையத்தில் ஹஃப்லாங் ரயில் நிலையம் முற்றிலும் வெள்ளத்தாலும் சேரும், சகதிகளாலும், குப்பைகளாலும் மூழ்கி இருக்கிறது. பயணிகள் ரயில் ஒன்று நிலையத்தில் சாய்ந்து கிடக்கிறது.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/RJGovind104/status/1526436061215215616
https://twitter.com/Rahulshrivstv/status/1526473657685798912
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ