சவூதி அரேபியாவில் வீசிய மணல் புயல் வீடியோ
அரபு பாலைவன நாடுகளில் மணல் புயல்கள் சகஜம் என்றாலும், கடந்த இரண்டு மாதங்களில் வழக்கத்தை விட அவை வலுவாக உள்ளன. சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத், மணல் புயல் காரணமாக சில நூறு மீட்டர் தொலைவில் தூசியால் மூடப்பட்டுள்ளது.
அதனால் அந்த பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறியது. மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்கி வரும் மணல் புயல் 828 மீட்டர் உயரமுள்ள புர்ஜ் கலிஃபா கட்டடம், வழக்கமாக துபாய் எங்கிருந்தும் பார்வைக்குத் தெரியும்.ஆனால் மணல் புயலில் புர்ஜ் கலிஃபாவும் மற்ற உயரமான கட்டடங்களும் கண்களுக்குத் தெரியவில்லை.மணல் புயலால் வானிலை குறித்தும் சாலைகளில் விபத்து அபாயம் குறித்தும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மணல்புயல் ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தூசியில் இருந்து பாதுகாப்பு பெற முகக்கவசம் அணிவதை பரிந்துரைக்க சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடுமையான மணல் புயல் காரணமாக, சுவாசக் கோளாறால் சுமார் 1,285 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் உருவான இந்த மணல் புயலானது சவூதியின் ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்திலும் தனது கடுமையை காட்டியுள்ளது,
கடும் வறட்சி, குறைந்த மழை, பருவநிலை மாற்றம் போன்றவற்றால் மணல் புயல் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஈரானில்“மோசமான வானிலை” மற்றும் மணல் புயல் காரணமாக பல மாகாணங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்