Breaking News

பொது இடங்களில் மஞ்சப்பை விநியோகம் இயந்திரம் வீடியோ- தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ

அட்மின் மீடியா
0

பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.



தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சி விரைவில் குறிப்பிட்ட சில இடங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த இயந்திரத்தில் 10 ரூபாய் செலுத்தினால் தரமான துணியிலான மஞ்சப்பையை அது கொடுக்கும். 


இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்:-

மஞ்சப்பை விற்பனை இயந்திரம் இறுதியாக விட்டது. பொது இடங்களில் மலிவு விலையில் துணி பைகள் கிடைப்பது சவாலாக உள்ளது. சந்தை, பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில் இவற்றை வைக்க பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்


வீடியோ:-

https://twitter.com/supriyasahuias/status/1527853199604199424

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback