Breaking News

வாட்ஸ்ப்பில் எமோஜி ரியாக்‌ஷன் அறிமுகம்... உடனே அப்டேட் பன்னுங்க

அட்மின் மீடியா
0

பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த வாட்ஸ் அப் செயலியையும் நிர்வகித்து வருகிறது. வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிதாக அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது வாட்ஸப்பில் எமோஜி ரியாக்‌ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான சோதனை நடைபெற்று வந்த நிலையில் பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அனைவருக்கும் அறிமுகமாகியுள்ளதாக மார்க் குறிப்பிட்டுள்ளார்.



உங்களது வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தாலே இந்த அப்டேட் உங்களுக்கு கிடைக்கும். ஒருவேளை அப்டேட் செய்தும் கிடைக்காதவர்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

சேட் செய்யும் போது குறிப்பிட்ட மெசேஜை அழுத்திப்பிடித்தால் குறிப்பிட்ட எமோஜிகள் கிடைக்கும். அப்டேட்டின்படி, லைக், லவ், சிரிப்பு, ஆச்சரியம், சோகம், நன்றி ஆகிய எமோஜிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது மேலும் வாட்ஸ் அப் சேட்டை சுவாரஸ்யமாக்கும் எனத் தெரிகிறது

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback