Breaking News

ஆன்லைன் மோசடி மூலம் நீங்கள் ஏமாற்றப்படும் வழிகள்

அட்மின் மீடியா
0

தற்போது இணையதளம் மூலம் பல்வேறு வங்கி வாடிக்கையாளர்கள்ஏமாற்றபடுகின்றார்கள், அவர்களது அறியாமையாலும், அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஏமாற்றுகின்றார்கள்.


 

 

ஏமாற்றப்படும் வழிகள்:-


மின்னஞ்சல் 

எஸ்எம்எஸ் 

கால்கள் 

அல்லது 

லிங்க்குகள் 

 

உங்கள் இ மெயில் மூலம் உங்களுக்கு ஏதேனும் ஒரு நிறுவனம் பெயரில் மெயில் அனுப்புவார்கள் நீங்கள் அதனை ஓப்பன் செய்தால் போதும் உங்கள் கம்யூட்டர், அல்லது மொபைல் போனை அவர்கள் ஹேக் செய்துவிடுவார்கள்

 

 எஸ் எம் எஸ் மூலம் உங்களுக்கு வங்கி பெயரில் உங்கள் அக்கவுண்டை புதுப்பிக்க, பாஸ்வேர்டை புதுப்பிக்க, கேயுசி அப்டேட் என்ற பெயரில் வரும் மெசஜ்ஜில் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படுகின்றது

அதேபோல் மொபைலில் போன் செய்து உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் ஆகிவிட்டது, அல்லது வங்கி கணக்கு பிளாக் ஆகிவிட்டது என பொய்யாக ஏதாவது காரணம் கூறி பாஸ்வர்டுகள், PIN, வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற தகவல்களை பெற்று மோசடி செய்கின்றார்கள்

முதலில் நீங்கள் ஒன்றை சரியாக தெரிந்து கொள்ளவேண்டும் எந்த ஒரு வங்கியும் தனது வாடிக்கையாளரின் தகவல்களைப் பெற  ஒருபோதும் மின்னஞ்சல் அனுப்புவதில்லை. போன் செய்து கேட்பதில்லை, மெசஜ் அனுப்புவதில்லை, உங்கள் பயனர் பெயர் அல்லது கடவுச்சொல் அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட தகவலை கேட்கமாட்டர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்

எச்சரிக்கையாக இருக்கவேண்டும்:-

உங்களுக்கு வரும் தேவையற்ற அனைத்து லிங்க்குகளையும் தவிர்க்க வேண்டும் இந்த போலியான லிங்க்கள் மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கணக்கு விவரங்கள் திருடப்படும். 

உங்கள் ஏடிஎம் எண், CVV, PIN நம்பர் போன்ற தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் இது போன்ற தகவல்களை கேட்டு வரும் எஸ்எம்எஸ்களை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும்

மோசடியாளர்கள் டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாக அனுப்பி லிங்க் அனுப்புவார்கள். ஏதேனும் ஒரு விஷயத்தை வெரிஃபை செய்கிறோம் உங்கள் அக்கவுண்டை புதுப்பிக்க, பாஸ்வேர்டை புதுப்பிக்க, கேயுசி அப்டேட் என்ற பெயரில் வரும் இணைப்புகளைநீங்கள் எந்த சூழ்நிலையிலும் குறிப்பிட்ட இணைப்புகளை (links) கிளிக் செய்ய வேண்டாம் 

வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் 

 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback